Connect with us

ஜங்கிள் புக் படத்தை பார்த்து செய்தாரோ? ஒற்றை ஆளாக ஒற்றை யானையை விரட்டிய நபர்!

Elephas maximus Bandipur scaled

செய்திகள்

ஜங்கிள் புக் படத்தை பார்த்து செய்தாரோ? ஒற்றை ஆளாக ஒற்றை யானையை விரட்டிய நபர்!

ஜங்கிள் புக் படத்தை பார்த்து செய்தாரோ? ஒற்றை ஆளாக ஒற்றை யானையை விரட்டிய நபர்!

பல்வேறு காடுகளை உருவாக்குவதற்கு முக்கிய பங்கு வகிப்பது யானைகள்தான். இந்த நிலையில் அவ்வப்போது யானைகள் மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையும். அதோடு மட்டுமல்லாமல் சர்வசாதாரணமாக யானைகள் சாலைகளில் கடந்துபோகும்.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பீதி அடைந்திருப்பார்கள். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒற்றை யானை ஒன்றை ஒருவர் சர்வசாதாரணமாக விரட்டியடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

அதன்படி சத்தியமங்கலம் அருகே உள்ள புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. அவ்வப்போது உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் யானைகள் காட்டைவிட்டு நகர்ப்புறங்களுக்கு நடந்து வரும்.

இந்த நிலையில் தமிழகம்-கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஏனென்றால் அங்கு ஒற்றை யானை ஒன்று முகாமிட்டு கொண்டிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். அப்போது ஒருவர் சர்வசாதாரணமாக சென்று யானை முன்பு திடீரென்று கீழே விழுந்துவிட்டார். இதைப் பார்த்த யானை மெல்ல மெல்ல பின் வாங்கியது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top