வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!

ஒருவன் வாழ்க்கையில் பெற வேண்டிய மிக முக்கிய செல்வம் தன்னம்பிக்கை. இது இருந்தால் தான் அவனது திறமை மேல் அவனுக்கு முதலில் நம்பிக்கையே வரும். நம்பிக்கை வர வர அவனது திறமையும் படிப்படியாக வளர ஆரம்பித்து விடும். அதன் மூலம் அவன் எத்தகைய பெரிய சவால்களான பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடுவான்.

Valluvar
Valluvar

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்தக்குறள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைப் பெற்றுத்தரும். யாருக்கு என்றால் ஆரம்பகட்டத்தில் முயற்சி செய்பவர்களுக்கு இந்தக்குறள். இது ஆறுதலுக்கானது.

வாழ்க்கையில் போராடி போராடி தோற்றுப் போய் இருப்பாங்க. அவங்களுக்கும் வள்ளுவர் குறள் எழுதியிருக்காரு.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

நீ எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் உனக்கு முன்னால வந்து நிற்கறது உன்னோட ஊழ் தான். இதுக்கு என்ன அர்த்தம்னா நமக்கு முன்னால ஒரு கர்மா இருக்கு. விதி இருக்கு. எல்லாம் விதிப்படி நடக்கும்பா என்று ஆறுதல் படுத்துகிறார். அந்த விதியை வெல்ல முடியாது என்றும் சொல்கிறார்.

அதற்காக அப்படியே விட்டுவிடலாமா…எது வந்தாலும் வரட்டும் என்று மோதிப்பார்க்க வேண்டும் அல்லவா? அது தானே வாழ்க்கை..அதற்கு வள்ளுவர் சொல்லும் ஐடியாவைக் கேளுங்க.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

இது தான் உந்துதலுக்கான குறள். உலகத்திலேயே பெரியது ஊழ் தான். அதை வெல்ல முடியாது என்று சொல்கிறார். ஆனால் இந்தக் குறளில் அவர் என்ன சொல்கிறார்னா அந்த ஊழைக்கூட வெல்லும் சக்தி உங்களது தாளா முயற்சிக்கு உண்டு. அதனால நீ முயற்சி பண்ணிப்பாருன்னு சொல்றாரு. எழுந்து வாடான்னு அவனுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறாரு.

ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சி செய்ததும் நமக்கே சோர்வு வர ஆரம்பித்து விடும். அப்போ நாம என்ன செய்றதுன்னும் வள்ளுவர் சொல்கிறார்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.

வாழ்க்கையில் முன்னேறிய எல்லோருக்கும் மிகவும் பிடித்த குறள் எது என்று கேட்டால் அவர்கள் இதைத் தான் சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால்…நீ ஒண்ண இழக்கப் போறீன்னா அதுக்கு முன்னாடியே உனக்கு தெரிஞ்சிடும். அது தான் சோம்பல். அது உண்டாயிடும். அதே போல ஒனக்கு உன்னு நடக்கப் போகுதுன்னா அதுக்கான முயற்சி முன்னாடியே உண்டாயிடும்.

trying 1
trying

இதைக் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரிய வரும். அதாவது பலகாலமாக முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் அவர்கள் விரக்தி நிலைக்குச் செல்லவில்லை. ஏன்னா அவங்க இவ்ளோ நாள் முயற்சி செஞ்சது என்னைக்குமே வீண் போகாது.

அதுக்கான பலன் நிச்சயம் வந்தே தீரும். ஒண்ணு நடக்கப்போகுதுன்னா அதுக்கான முயற்சி முன்கூட்டியே நடந்துவிடும் என்று வள்ளுவர் சொன்னார் அல்லவா? அது தான் நீங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் முயற்சி. இதற்கான பலன் விரைவில் நடந்தே தீரும். இது உங்களுக்கு பெரும் தன்னம்பிக்கையைத் தரக்கூடிய திருக்குறள்.

lazy
lazy

அதே நேரம் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார். நீ ஓடிக்கிட்டே இருக்கும்போது சோம்பேறியாக மட்டும் உட்கார்ந்திராத. எதையாவது ஒண்ணை இழந்து விடுவாய் என்கிறார். அவர் சொன்ன ஒரே ஃபார்முலா இதுதான். நீ எதையாவது ஒண்ண பெறப்போறீன்னா முயற்சி பண்ணுவ. எதையாவது ஒண்ண இழக்கப் போறீன்னா சோம்பேறியா உட்காருவ…!

நீங்களே உங்கள் முடிவைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். உங்கள் சாய்ஸ் என்று வள்ளுவர் நம் முன்னேற்றத்திற்கான விடையை நம்மிடமே விட்டு விட்டார். என்ன ஒரு ஜீனியஸ் வள்ளுவர் என்று பாருங்க. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எவ்வளவு சூப்பரா நம் வாழ்க்கையைக் கணித்து இருக்கிறார்…என்று பாருங்கள்.

இது தெரிந்துவிட்டால் நாம் சோம்பேறியாக இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வகையில் இலக்கை நோக்கி முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். சும்மாவே இருக்கக்கூடாது. அப்போது தான் நம் இலக்கை அடைய முடியும் என்று நீங்கள் அதைப் பின்பற்றி விடுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.