
Tamil Nadu
ஜூன் மூன்றாம் தேதி வரை தொடரும் மழை; நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!!
தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.
அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
#breaking news….தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு;
இந்த நிலையில் நாளைய தினம் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு, பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் ஜூன் 1, 2, 3 ஆகிய மூன்று தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
