Connect with us

ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்;

rain

தமிழகம்

ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்;

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த மழையானது கோடை காலமான மே மாதம் முழுவதும் தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று ஆரம்பித்த மழை தற்போது வரை நீடித்துக் கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இன்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top