
தமிழகம்
விடாமல் துரத்தும் மழை..! 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்;
தற்போது தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. அதுவும் குறிப்பாக மே 4ஆம் தேதி முதல் மே 28 வரை நம் தமிழகமெங்கும் அக்னி நட்சத்திரம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகத்தில் வெப்பநிலை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் அதனை குறைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான அசனி புயலின் காரணமாக இத்தகைய மழை பொழிவு தமிழகத்திற்கு கிடைத்தது இந்த நிலையில் இன்றைய தினமும் இந்த மழை குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழை மட்டும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
