நாளை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;

நம் தமிழகத்தில் குளிர்காலத்தின் தாக்கம் இந்த ஆண்டு சற்று அதிகமாகவே உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் காலை நேரங்களில் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டமானது படர்ந்து காணப்படுகிறது.

இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதே வேளையில் இன்னும் சில நாட்களில் கோடை காலம் தொடங்க உள்ளதால் மக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற கவலையிலும் காணப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையமானது மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. அதன்படி நாளை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த மிதமான மழையானது தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்  வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. நிலநடு கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது என்பதால் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.