தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் வருடம் தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2022ல் தாள் 1க்கான கணினி வழித் தேர்வானது (Computer Based Examination) தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்து தாள் 2 க்கான தேர்வு எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர் இந்த நிலையில் இன்று தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு , ஜனவரி மாதம் 31.01.2023 முதல் பிப்ரவரி மாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள் 2 தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும் . மேலும் தேர்வுக்கான பயிற்சி தேர்வுகள், 15 நாட்களுக்கு முன் வழங்கப்படும் . அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை! 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
மேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டை ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களுக்கு, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வாணையத்தின் வலைத்தளத்தை பின் தொடரவும்.