கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பரவலானது குறைந்துள்ளதால் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி, இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் இவர்களுக்கு கணினி வழியாக வருகின்ற நவம்பர் 11-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 32 -க்கு கீழ் இப்பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.