சம்பளம் ரூ.1.13 லட்சம்: முக்கிய பணிகளுக்கு தேர்வு தேதியை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி!

ரூ.1.13 லட்சம் சம்பளம் வரும் தமிழக அரசின் பணிகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி அமைப்பு முக்கிய பணிகளுக்கு தேர்வு தேதியை அறிவித்து உள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை செய்துவரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வேலைக்கு ஊழியர்களை எடுப்பது வழக்கமான ஒன்றுதான்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

tnpscஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிக்கான காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதியை தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் மற்றும் வேசின் ஸ்டோர் கீப்பர் உள்பட மூன்று பணிகளுக்கு தேர்வு தேதியை அறிவித்து உள்ளது என்பதும் இதற்கான சம்பளம் 19 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பணிக்கான தேர்வு தேதி மற்றும் பணிக்கான தகுதிகள் குறித்து முழுமையான விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print