குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி இருந்தது. அந்த வகையில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழக முழுவதும் 1.90 லட்சம் பேர் எழுதியிருந்தனர் என்பதும் இந்த தேர்வு எழுதி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

tnpsc exam 1

இந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் மார்ச் முடிந்தும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை.  இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இம்மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

மேலும் 5,446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குரூப் 8 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 1 தேர்வு எழுதிய அவர்கள் முடிவை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...