டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பது என்பதை தற்போது பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 பிரிவில் உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்பட 161 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் 18ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். தேர்வர்கள் தஙக்ள் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய https://www.tnpsc.gov.in/, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது தமிழ் தேர்வு நடைபெறும் என்றும் அதன் பிறகு அதே நாளில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது ஆங்கிலம் தேர்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரும் உதவிப் பிரிவு அலுவலர் 36 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் உதவியாளருக்கு 23 ஆயிரம் ரூபாய் வரை ஆரம்பகட்ட சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.