
Tamil Nadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: இன்றுதான் கடைசி நாள்…! சர்வர் பிரச்சனை இருக்குமா?
நம் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நாள்தோறும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மே இருபத்தி ஒன்றாம் தேதி தமிழகமெங்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாத இறுதிவரை அதி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி தமிழகமெங்கும் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது வரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இன்று விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் பல இடங்களில் சர்வர் பிரச்சினைகளும் இன்று அதிகம் நிகழ வாய்ப்புள்ளதால் விண்ணப்பிப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஏப்ரல் 25ஆம் தேதி வரையில் 13.17 லட்சம் பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
