டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும் – பகுதி 2

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் புகழ் பெற்ற நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய நூல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும்:

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்:

நூறாசிரியம்,

பள்ளிப் பறவைகள்,

கனிச்சாறு,

கொய்யாக்கனி,

பாவியக் கொத்து,

எண்சுவை எண்பது,

உலகியல் நூறு

 

காளமேகப் புலவர் எழுதிய நூல்கள்:

தனிப்பாடல் திரட்டு,

திருவானைக் காவல் உலா,

சரஸ்வதி மாலை,

சித்திர மடல்,

பரப்பிரம்ம விளக்கம்

 

குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள்:

நாயன்மார் அடிச்சுவட்டில்,

குறட்செல்வம் ஆலயங்கள் சமுதாய மையங்கள்

 

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்:

மலைக்கள்ளன்

திருக்குறளும் பரிமேலழகரும்

திருவள்ளுவர் திடுக்கிடுவார்

திருக்குறள் புது உரை

கம்பனும் வால்மீகியும்

கம்பன் கவிதை இன்பக் குவியல்

அவனும் அவளும்

சங்கொலி

மாமன் மகள்

அரவணை சுந்தரம்

 

இராமலிங்க அடிகள் எழுதிய நூல்கள்:

ஜீவகாருண்ய ஒழுக்கம்,

மனுமுறை கண்ட வாசகம்,

கந்தர் சரணப் பத்து

தெய்வமணி மாலை

 

ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய நூல்கள்:

தமிழ் விருந்து,

தமிழகம் ஊரும் பேரும்,

தமிழ் இன்பம்

ஆற்றங்கரையினிலே

கடற்கரையினிலே

 

மா.பொ.சிவஞானம் எழுதிய நூல்கள்:

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,

எனது போராட்டம்

 

குணங்குடி மஸ்தான் எழுதிய நூல்கள்:

எக்காலக் கண்ணி,

மனோன்மணியக் கண்ணி,

அகத்தீசர் சதகம்,

நந்தீசர் சதகம்,

ஆனந்தக் களிப்பு

 

தாராபாரதி எழுதிய நூல்கள்:

புதிய விடியல்கள்,

இது எங்கள் கிழக்கு,

விரல் நுனி வெளிச்சங்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment