டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 2
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்:
திருவள்ளுவர் அடைமொழிப் பெயர்கள்:
முதற்பாவலர்
பெருநாவலர்
தெய்வப் புலவர்
செந்நாப் போதார்
நாயனார்
மாதானுபங்கி,
தேவர்
நான்முகனார்
பொய்யில் புலவர்
அகத்தியர் அடைமொழிப் பெயர்கள்:
குறுமுனி
இளம் பூரணர் அடைமொழிப் பெயர்கள்:
உரையாசிரியர்
உரையாசிரியச் சக்ரவர்த்தி
உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
நச்சினார்க்கினியர் அடைமொழிப் பெயர்கள்:
உச்சிமேற்கொள் புலவர்
உரைகளில் உரை கண்டவர்
கபிலர் அடைமொழிப் பெயர்கள்:
புலனழுக்கற்ற அந்தணாளன்
நல்லிசைக் கபிலன்
பொய்யா நாவின் கபிலர்
கம்பர் அடைமொழிப் பெயர்கள்:
கவிச்சக்ரவர்த்தி
கல்வியில் பெரியவர்
சீத்தலைச் சாத்தனார் அடைமொழிப் பெயர்கள்:
தண்டமிழ் ஆசான்
சாத்தன்
நன்னூற் புலவன்
திருத்தக்க தேவர் அடைமொழிப் பெயர்கள்:
தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
புகழேந்தி அடைமொழிப் பெயர்கள்:
வெண்பாவிற் புகழேந்தி
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அடைமொழிப் பெயர்கள்:
மகாவித்வான்
ஔவையார் அடைமொழிப் பெயர்கள்:
தமிழ் மூதாட்டி
ராமலிங்க அடிகளார் அடைமொழிப் பெயர்கள்:
வள்ளலார்
அருட்பிரகாசர்
ஓதாது உணர்ந்த பெருமாள்
சன்மார்க்கக் கவி
வடலூரார்
இறையருள் பெற்ற திருக் குழந்தை
