டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அந்த தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேர்வு நடந்து எட்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 11 வகை பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.

10,117 பதவிகளுக்காக சுமார் 19 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்கள் http://tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews