தமிழகமே அதிர்ச்சி..!!! டிஎன்பிஎஸ்சி ”குரூப் 4” தேர்வில் 15% ஆப்சென்ட்;;;

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் தேர்வுகள் தொடங்கியுள்ளது.

அதன் படி, இன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வுகள் நடைப்பெற்றது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் மொத்தமாக 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் 9 மணிக்கு தொடங்கிய குரூப்-4 தேர்வானது மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது. தற்போது குரூப் 4 தேர்வில் சுமார் 15 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆப்சென்ட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு இன்றைய தினத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் வினாத்தாள் என்பது சற்று கடினமானதாக இருந்ததாக தேர்வர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment