TNPSC Group 2: மாஸ்க் கட்டாயம்..! ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை!!

நம் தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு மே இருபத்தி ஒன்றாம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இன்றைய தினம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு பற்றி சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுதுவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது டிஎன்பிஎஸ்சி .

தேர்வு எழுதுவோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகள் சரி பார்க்கும் போது மட்டும் மாஸ்க் அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. வரும் 21ஆம் தேதி நடைபெறும் குரூப் 2 குரூப் 2 தேர்வில் தேர்வர்கள் smart watch அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment