
தமிழகம்
TNPSC குரூப் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் பற்றிய முழு விவரம் இதோ!!..
நடந்து முடிந்த குரூப் 2 தேர்வு பற்றிய கட் ஆப் மதிப்பெண் விவரம் :
1.மொத்த காலியிடங்கள் : ஏறக்குறைய 6000
2. தேர்வு எழுதியவர்கள் – 8லட்சம் +
3. கடுமையான போட்டியாளர்கள் : 2 லட்சத்துக்குள்
4. முந்தைய ஆண்டுகளில் கட் ஆஃப் – 138+ ( ஏறக்குறைய 2000 காலியிடங்கள்)
5. தற்போதைய வினாக்கள் தரம் :
தமிழ் – மிக எளிமையாக ( 95+- 50000 பேர், 85 முதல் – 100000, 75 முதல் – 100000 , மற்றவர்கள் தேர்ச்சி அடைய தகுதியான நபர்கள் அல்ல )
கணிதம் – (25-> 25000 முதல் , 20முதல் 25 – 50000 முதல், 17முதல் 20 – 100000 நபர்கள், மற்றவர்கள் எதிர் பார்க்க தேவையில்லை )
பொது அறிவு – 60 முதல் 80- 25000,
40 முதல் 60- 75000,
35 முதல் 50- 100000
மொத்தத்தில் –
1)150 முதல் 160- 5000 பேர்
2) 140 முதல் 150- 25000 பேர்
3)135 முதல் 140- 25000 பேர்
4) 125 முதல் 140- 50000 பேர்( கடுமையான போட்டி)
மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப் படுவோர் – 6000 * 10- 60000 +5000 சம மதிப்பெண் பெற்றவர்கள் = 65000
மொத்தத்தில் 130+ வினாக்கள் பெற்றவர்கள் மெயின் தேர்விற்கு தயார் ஆகலாம்.. சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்களும் நடைபெறும்.. தங்கள் community யை பொறுத்து இக்கணக்கீடுகள் மாறுபடும். உதாரணமாக கடந்த சில ஆண்டுகளாக MBC வகுப்பில் கடுமையான போட்டி நிலவுகிறது.. மற்ற வகுப்பில் இது போன்ற நிலை இல்லை.. மாற்றுத்திறனாளிகள் , விதவைகள், ஆதரவற்றோர் – 130 வினாக்கள் சரியான முறையில் பதில் அளித்து இருந்தாலே போதும். PSTM ஒவ்வொரு categories லயும் 5 முதல் 10 வினாக்கள் குறையும். பெண்களுக்கு 2 முதல் 3 வினாக்கள் குறையும்.
