டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து தேர்வை எழுதியவர்கள் தங்கள் முடிவை பார்த்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 92 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை  தேர்வை மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

tnpsc exams

இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நேற்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்தது.

ஒரு பணியிடத்திற்கு 20 பேர் என்ற வீதத்தில் 2062 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ சேவை மையங்கள் மூலம் மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews