கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. குறிப்பாக துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் உள்ளிட்ட 6 பதவிகளில் 92 காலிபணியிடங்கள் நிரப்ப ஆகஸ்ட் 22-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அக்டோபர் 30-ம் தேதி நடைப்பெறும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வில் இதுவரையில் 3,1,678 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அதோடு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தேர்வர்கள் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி வரையில் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது.