ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு வைத்து பணியாளர்களை நியமித்து வருகிறது என்பதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
ஒரு சில நூறு காலியான இடங்களுக்கு இலட்சக்கணக்கில் தேர்வர்கள் எழுதுவார்கள் என்பதும் அதில் திறமை உள்ளவர்களுக்கு மட்டும் வேலை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முழு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தேர்வு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி எந்த தேர்வுக்கு தயாராக வேண் டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தேர்வை பொருத்தவரை சரியாக உழைத்து நன்றாக படித்தால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர்ந்து விடலாம் என்பதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் அரசு வேலை கிடைத்து அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.