டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எப்போது? முழு விவரம் இதோ!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை சற்றுமுன் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் முதல்நிலை தேர்வு 2023ம் ஆண்டு நவம்பரிலும், மெயின் தேர்வு 2024 ஜனவரியிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் என்றும், அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்போது இருந்தே தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.