தமிழகத்தில் படிக்கின்ற இளைஞர்கள், படித்து முடித்த இளைஞர்கள் என பலருக்கும் அரசாங்க வேலை என்பது கனவாக மாறிவிட்டது. இதற்காக அவர்கள் இரவு பகல் பாராமல் கடினமாக படிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நேர்காணல் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பல துறைகளில் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் மற்றும் செயலாளர் உமாமகேஸ்வரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கையை வெளியிட்டனர்.
அதன்படி குரூப் 2, குரூப் 2a தேர்வுக்கான அறிவிப்பாணை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பாணை மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்ட பின் 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். வினாத்தாள்களை கொண்டு வரும் லாரிகள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.