
தமிழகம்
TNPSC குரூப் தேர்வில் தமிழ்வழி (PSTM) என்ன தெரியுமா?…
நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில் தமிழ்வழியில் படித்தோருக்கான (PSTM) சிறு விளக்கம்.
1.மொத்தம் உள்ள காலி பணியிடங்கள்-5500
2. தேர்வு எழுதிய மொத்த நபர்கள்- 9 இலட்சங்கள்
3. தமிழ் வழியில் பயின்றோரின் எண்ணிக்கை – 80000
4. மொத்த பணியிடங்கள் 20 சதவீதம்- 5500*20% = 1100
5. முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள தமிழ் வழியில் பயின்றோரின் எண்ணிக்கை – 1100*10 = 11000 நபர்கள்
PSTM vs General
1. முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் மொத்த எண்ணிக்கை = 5500*10= 55000 நபர்கள்.
2.PSTM வழியில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளோர் = 11000 (80000 நபர்களில் 11000 பேர்)
அதாவது 80000÷11000= 7.27 விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கையில் 7ல் ஒருவருக்கு முதன்மைத் தேர்வு வாய்ப்பு அமையும்.
3. ஏனைய வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளோர் – 55000-11000 = 44000 (8 லட்சம் நபர்களில் 44000 பேர்)
அதாவது 800000÷44000=18.18
விண்ணப்பித்த நபரின் எண்ணிக்கையில் பதினெட்டில் (18 ல் 1 )ஒருவருக்கு முதன்மைத் தேர்வு வாய்ப்பு அமையும்.
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு பிறகு பணியிடம் பெறுதல்
PSTM : 80000 நபர்களுக்கு 1100 பணியிடங்கள் (73 நபர்களில் 1 ஒருவருக்கு பணி நிச்சயம்)
Others : 820000 நபர்களுக்கு 4400 பணியிடங்கள் (186 நபர்களில் ஒருவருக்கு பணி நிச்சயம்)
எனவே, மற்றவர்களுடன் ஒப்பிடும் போது PSTM நபர்களுக்கு பணி கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
சிறந்த முறையில் தேர்வினை அணுகினால் நேர்காணல் பதவிகளை கூட எளிதில் பெறும் வாய்ப்பு உள்ளது.
