டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது என்பதும் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளை எழுதினார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த வதந்தி கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருவதை அடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு குறித்து அதிகாரபூர்வ செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. அந்த செய்தி குரூப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 4 அடங்கிய பணிகளுக்கான தேர்வினை 24/7/2022 அன்று நடத்தியது.

இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையதால் 14/ 2/ 2003 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்தி குறிப்பின்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews