டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல், திருச்சி அணிகள் வெற்றி!

74d61ac5c74c045780c8d36acbf1f37e

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் நேற்று வெற்றி பெற்றன.

நேற்று இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 18 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி, திருச்சி வாரியர்சை அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த மதுரை அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 138 என்ற இலக்கை நோக்கி ஆடிய திருச்சி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

இன்று நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment