Career
8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் : 15 காலிப்பணியிடம்
சம்பளம் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை
கல்வித் தகுதி :
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்ப படிவம் தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tamilminutes.com/wp-content/uploads/2020/01/tnl.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
அரசு தலைமை வழக்குரைஞர்,
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்,
உயர்நீதிமன்றம், சென்னை – 600 104.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01..2020
