Connect with us

இவர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்… தமிழக அரசு அதிரடி!

கொரோனா பரிசோதனை

தமிழகம்

இவர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்… தமிழக அரசு அதிரடி!

இவர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்… தமிழக அரசு அதிரடி!

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனிடையே
பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் யாருக்கு எல்லாம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.

சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளவது கட்டாயம்.

வெளிநாட்டுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2% பேர் ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர்

வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதனை நடத்தப்படும்.

பரிசோதனை மாதிரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அரசு சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top