2 டோஸ் செலுத்தியிருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு வரவேண்டும்: புதிய கட்டுப்பாடு!

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் வெளிநாட்டினர் வரவேண்டுமென திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுகாதாரத் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 750 பேர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து உள்பட பல வெளிநாடுகளில் தற்போது மூன்றாவது அலை தோன்றி இருப்பதை அடுத்து வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கண்டிப்பாக இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.

ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலோ அல்லது தடுப்பூசி செலுத்தாவிட்டாலோ 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் அந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment