தமிழகம்
அரசு பேருந்துகளின் வயது அதிகரிப்பு: தமிழக அரசு ஆணை!
தமிழக அரசு பேருந்துகளின் வயது உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த அரசாணையின் படி ஒரு பேருந்து மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு இலட்சம் கிலோ மீட்டர் வரை இயக்கப்படலாம் என்று இருந்த நிலையில் அரசு விரைவு பேருந்து ஆயுள்காலம் இனிமேல் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது
அதேபோல் ஆறு ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டராக இருந்த மற்ற அரசு பேருந்துகளின் ஆயுள்காலம் 9 ஆண்டுகள் மற்றும் 12 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது
புதிய சாலை வசதிகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவை காரணமாகவும், பேருந்துகளின் நவீன வடிவமைப்பு காரணமாகவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் விளக்கம் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே பல அரசு பேருந்துகள் ஓட்டை உடைசல் ஆக இருக்கும் நிலையில் மேலும் சில ஆண்டுகள் அரசு பேருந்துகளை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது
