News
தேர்வு எழுதாமலே அனைவரும் பாஸ்: தமிழக அரசு விரைவில் அறிவிப்பு

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்று அறிவித்தார்
இதனை அடுத்து வேறு சில மாநில இதனை கடைபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்தாமல் பாஸ் என்று அறிவிக்க தமிழக அரசின் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
