கல்லூரிகள் மீண்டும் திறப்பு? தமிழக அரசின் முடிவு என்ன?

82c26b8d71d3b65acea2530c18c41f2b

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப் படவில்லை என்பதும், இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்காக கல்லூரிகளைத் திறக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அலை தாக்கம் குறித்து முழுமையாக அறிந்து மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்ட பிறகுதான் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு குறித்து இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment