மாநகராட்சி ஆனது தாம்பரம்: அரசிதழில் வெளியீடு!

இதுவரை நகராட்சியாக இருந்த தாம்பரம் தற்போது மாநகராட்சியாக உருவாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தாம்பரம் மாநகராட்சி என தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு அவசர சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் கே.என்.ரவி அவர்கள் ஒப்புதல் அளித்ததை அடுத்து தாம்பரம் மாநகராட்சி ஆனது என்பதும் இது குறித்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உருவாகி உள்ளது என்பதும் இதன் காரணமாக அந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment