கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எழுப்பியுள்ள கேள்வி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வந்தாரை வாழ வைக்கும் நாடு இது.அது போல தான் வடமாநில தொழிலாளர்களும் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் அவர்களுக்கு வேலை அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமை.
ஸ்டாலின் உட்பட பல கட்சிகள் தங்களை மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறி வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருக்கும் பட்சத்தில் திமுகவில் கூட்டணி உள்ள முஸ்லிம் லீக் கட்சி,மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மதசார்பற்ற கட்சியா ஸ்டாலில் விளக்கம் அளிப்பாரா என கேள்வி எழுப்பினார்.
அதிமுக என்பது ஒரு பகுதிக்கு மட்டும் சொந்தமான இயக்கமல்ல தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நிலையில் இன்றும் எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது நாளையும் ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியான இயக்கம் அப்படிப்பட்ட இயக்கத்தை கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு துளி கூட செல்வாக்கு இல்லை என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கூறியிருப்பது அவருடைய அறியாமையை காட்டுகிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி மாணவர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல் பயிற்சி அளித்தால் நிச்சயமாக தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் முதலிடம் வருவார்கள் எனக்கூறியுள்ளார்.