Connect with us

‘பொதுமக்கள் மீது கூடுதல் சுமை’…. இந்த உத்தரவை திரும்ப பெறுங்கள்!!

electric meter

தமிழகம்

‘பொதுமக்கள் மீது கூடுதல் சுமை’…. இந்த உத்தரவை திரும்ப பெறுங்கள்!!

நேற்றைய தினம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலாக உள்ளதாக மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

8 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக குறிப்பிட்ட யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் அதிகரிக்கும் என்றும் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு மின்மாற்றி தான் பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இத்தகைய உத்தரவினை தமிழக அரசு மீண்டும் பெறவேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதன்படி தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மின்கட்டண உயர்வு என்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் செயல் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top