Connect with us

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அடித்தது ஜாக்பாட்… அரசு அதிரடி அறிவிப்பு!

samayam tamil 1 2

செய்திகள்

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அடித்தது ஜாக்பாட்… அரசு அதிரடி அறிவிப்பு!

நீதி நிர்வாகம் துறை சார்பில் வெளியான அறிவிப்பில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட நீதிமன்றம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இன்று சட்டப்பேரவையில் சட்டத்துறை, நீதி நிர்வாகம், சிறைகள் – சீர்திருத்தப் பணிகள் துறை, செய்தி மற்றும் விளம்பரம் துறை ,எழுது பொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்ததை தொடர்ந்து, சட்டத்துறை,நீதி நிர்வாகம், சிறைகள் -சீர்திருத்தப் பணிகள் துறை , செய்தி மற்றும் விளம்பரம் துறை ,எழுது பொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து நீதி நிர்வாகம் துறை சார்பில் அமைச்சர் ரகுபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதேபோல் தென்காசி மாவட்டத்திற்கு தென்காசியில் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும். ராணிப்பேட்டையில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top