‘நாளை ‘வலிமை’யை ரிலீஸ் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை வலிமையை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சிமெண்ட் விலை உயர்ந்து வருவதை அடுத்து தமிழக அரசின் டான்செம் நிறுவனமே சொந்தமாக சிமெண்ட் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

வலிமை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிமெண்ட் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வலிமை சிமென்ட் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார் என்றும் இதனை அடுத்து குறைந்த விலையில் தரமான சிமென்ட் கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

சிமெண்ட் விலை மிக அதிகமாக இருக்கும் நிலையில் வலிமை சிமெண்ட்டை பொதுமக்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் வாங்கி பயன் அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment