கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில் நகர மேம்பாடு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு…
– கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
– கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் கோவை அவிநாசி சாலை – சக்தி சாலையை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் படி அமைக்கப்பட உள்ளது.
– மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் பட்ஜெட்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
– பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும், இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.