சென்னைக்கு மட்டும் இத்தனை அறிவிப்புகளா?… தலைநகரை தலைகீழாக மாற்றும் திட்டங்கள்!
தமிழக பட்ஜெட்டில் தலைநகர் சென்னைக்கு மட்டும் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என பார்க்கலாம்…
சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சென்னை அருகே லண்டனைச் சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரவாயல் – துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து, 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்க திட்டம்.
உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்தப்படும்.
கிண்டி குழந்தைகள் பூங்கா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை பூங்காவாக மறுவடிமைப்பு செய்யப்படும்.
