அதிமுக உட்கட்சி விவகாரம்; அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், குறிப்பாக திமுகவின் பண பலம் மற்றும் படை பலத்தை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்றால் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வந்தேன். வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பு கூட தொலைபேசி வாயிலாக பேசி 30 தேதி வரை நான் காத்திருக்கிறேன் அதன் பிறகு நான் வேட்பாளரை அறிவிப்பேன் என சொல்லி அது படி அறிவித்திருந்தார். ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினோம். இரட்டை இலை சின்னத்தில் நின்றால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம் எனக்கூறினார்.

நேற்றைய தினம் ஓபிஎஸ் இடத்திலும் இதே கோரிக்கையை தான் முன்வைத்ததாகவும், அதிமுகவினர் பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்பதால் இணைந்து போட்டியிட வலியுறுத்தியதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

வலிமையான ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், இதற்காகவே இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளர் வலிமையானவர், ஏற்கனவே அதேதொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அவரது பின்னால் நின்று பாஜக வெற்றிக்கு பாடுபடும் எனக்கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.