அந்த வார்த்தையை ‘ஸ்கிப்’ செய்த ஆளுநர்… உரையில் இதையெல்லாம் கூட படிக்கலையாமே!

தமிழ்நாடு ஆளுநர் ஆ.என்.ரவி தனது உரையில் திராவிட மாடல் போன்ற  பல்வேறு முக்கியமான வார்த்தைகளை படிக்காமல் ஒதுக்கி தள்ளியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை மரபுப்படி ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் வணக்கம் எனக்கூறியதுமே, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘எங்கள் நாடு தமிழ்நாடு’ என முழுக்கமிட்டு ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் தன்னுடைய உரையுடன் ஆளுநர் தொடங்கும் போது, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ஆளுநரை கண்டிக்கிறோம்’ என திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

அத்துடன் ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர். ஆனால் கட்சியினரின் கூச்சல் குழப்பங்களை எல்லாம் கண்டு கொள்ளாத ஆளுநர் தனது உரையை தொடர்ந்து ஆற்றினார்.

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் புகழ்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் உரையில் ஆர் என் ரவி வாசிக்கும்போது 64வது அறிவிப்பில் சிலவற்றையும் 65 ஆவது அறிவிப்பு முழுதையும் வாசிக்க மறுத்து 66 வது அறிவிப்புச் சென்றது பரபரப்பாகி உள்ளது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது இதனால் பன்னாட்டு உதவிகளை ஈர்த்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியை கடந்து சென்றுள்ளார்.

65வது அறிவிப்பில் உள்ள சமூகநீதி சுயமரியாதை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் பெண்ணுரிமை மத நல்லிணக்கம் பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வாறு அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன தந்தை பெரியார் அண்ணா அம்பேத்கர் பெருந்தலைவர் காமராஜர் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்பதையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துள்ளார்.

ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் பெயரையும் திராவிட மாடலையும் ஆளுநர் தனது உரையின்போது படிக்காமல் புறக்கணித்தார். தமிழக சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்து சென்றுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.