என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி., என இருபெரும் ஜாம்பவான்களில் குரலாக திரையில் ஒலித்தவர் பிரபல பின்னனிப் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன். திரையில் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார். இவரின் முருகன் பாடல்கள் இன்றும் பல இல்லங்களிலும், கோவில்களிலும் தினசரி ஒலித்துக் கொண்டிருக்கும்.

அப்பேற்பட்ட புகழுக்கச் சொந்தக்காரர் தன்னை வளர்த்து விட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு கச்சேரியில் ஒரு பாடலைக் கேட்க எம்.எஸ்.வி. பாட முடியாது என்று சொல்லிவிட்டார். 1972-ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம் . சிவாஜி நாயகனாக நடித்த பட்டிக்காடா பட்டிணமா வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ‘’அடி என்னடி ராக்கம்மா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் பாடலாக இருந்து வருகிறது.

கமல் ரசிகருக்காக ரஜினி செய்த உதவி.. நன்றிக் கடனுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்த செயல்..

இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். இந்தப் பாடல் டப்பாங்குத்து பாடலாக அப்பொழுதே பல திருவிழாக்களிலும், கச்சேரிகளிலும் ஒலித்தது.
டி.எம்.எஸ் சினிமாவில் இவ்வாறு பலதரப்பட்ட பாடல்களை பாடியிருந்தாலும் பக்தி அதிகம் இருக்கும் ஒரு நபராக இருந்துள்ளார்.

தனது பக்தியின் காரணமாக கோவில் விழாக்களில் நடக்கும் கச்சேரிகளில், சினிமா பாடல்களை பாடுவதில்லை என்ற கொள்கையுடன் இருந்துள்ளார். அப்படி இருக்கும்போது ஒருமுறை எம்.எஸ்.வியுடன், கோவில் விழா கச்சேரி ஒன்றுக்கு சென்ற டி.எம்.எஸ்.பக்தி பாடல்களை பாடி அசத்தியுள்ளார். அப்போது எம்.எஸ்.வி, இந்த ‘’என்னடி ராக்கம்மா பாடலை கொஞ்சம் பாடுங்களே என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட டி.எம்.எஸ். என்னால் முடியாது. கோவில் விழாக்களில் சாமி பாடல்கள் மட்டும் தான் பாடுவேன் இங்கு சினிமா பாடல்களை என்னால் பாட முடியாது என்று மறுத்துள்ளார். டி.எம்.எஸ். இப்படி சொன்னதால், அவர்கள் இருவருக்கும் இடையெ சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. கொள்கை என்று வந்துவிட்டால் அதை எதற்காகவும் என்னால் தளர்த்திக்கொள்ள முடியாது என்று டி.எம்.எஸ்.கூறியுள்ளார். தனது கொள்கைக்காக அவரது பேச்கை தட்டி கழித்துள்ளார் என்று இயக்குனரும் சினிமா பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...