டைட்டில் வின்னர் ராஜுவின் லூட்டி! பிக்பாஸ்க்கு பின் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி பகிர்வு;
இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 கலகட்டி நடைபெற்றது. இதில் டைட்டில் வின்னர் ஆக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தினைப் பிரியங்கா பிடித்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிறைவு பெற்று கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக உள்ள நிலையில் எப்போது பிக்பாஸ் கொண்டாட்டங்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பிப்ரவரி 6ஆம் தேதி பிக்பாஸ் கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதில் பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியிட்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது ஒரு புதிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புரோமோ வீடியோ முழுவதும் டைட்டில் வின்னர் ராஜுவை பற்றியதாக காணப்படுகிறது. அதில் உண்மையிலேயே எனக்கு பரிசு கொடுத்தார்கள் இல்ல சும்மாவா என்று நிச்சயத்தை கொள்வதற்கு நான்கு நாட்கள் ஆனதாக அவர் பேசியுள்ளார்.
அதேவேளையில் பிக் பாஸ் வீட்டில் மார்னிங் சாங் போடப்படும். அதே மாதிரி வீட்டில் பாடவில்லை என்று அவர் கூறினார். இது போன்ற சுவாரசியமான விஷயங்களை டைட்டில் வின்னர் கூறியுள்ளார். அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
