உண்மையிலேயே மூழ்கியது டைட்டானிக்கா அல்லது ஒலிம்பிக்கா?

பல ஆண்டுகளாக டைட்டானிக் பற்றி மக்கள் பேசிவருகிறார்கள் மற்றும் அது எப்படி 1912 ஏப்ரல் மாதம் ஒரு இரவு நேரம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி மூழ்கியது என்ற சந்தேகமும் மக்களுக்குள்ளே புகையாய் கசிந்துக் கொண்டிருக்கிறது. எனினும் சிலர், உண்மையிலே மூழ்கியது டைட்டானிக் கப்பல் தானா அல்லது ஒலிம்பிக் கப்பலா? என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கின்றனர். அது ஒரு காப்பீட்டு மோசடி எனவும் நம்பப்பட்டு வருகிறது.

இறுதியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் 12,500 அடி ஆழத்தில் டைட்டானிக் உறங்கிக்கொண்டிருப்பதாக நம்பிவிட்டோம். இந்த கட்டுரையில், அந்த இரவு மற்றும் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் விவரிக்கப்படுகிறது.

மூழ்கியது ஒலிம்பிக் தான் என மக்கள் நம்பக் காரணம் 1911 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி “HMS Hawke”-உடன் ஒலிம்பிக் கப்பல் ஒரு தீவின் அருகே மோதிக்கொண்டது.

இந்த விபத்து சம்பவம் கப்பல் உரிமையாளர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒழும்பிக் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அதை மக்கள் சேவைக்கு பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது, அதே நேரம் டைட்டானிக் கப்பலின் முதல் பிரயாணம் மார்ச் 20 முதல் ஏப்ரல் 10-க்குள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், White Star Line-க்கு சட்டப்பூர்வ கட்டணங்களை செலுத்தவும், ஒலிம்பிக்கை சரிசெய்வதற்கான செலவையும் சமாளிக்க முடியாதபடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் ஒரு திட்டத்தை வகுத்தனர். அதாவது காப்பீட்டு தொகை மட்டுமல்லாமல் ஒலிம்பிக் சேவையில் இல்லாததால் இழந்த வருமானத்தையும் திரும்ப பெற்றிட பயங்கரமான அந்த திட்டத்தை வகுத்தனர்.

அவர்கள் தீட்டிய திட்டம் எளிமையான ஒன்று. மிக துல்லியமாக ஒலிம்பிக் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்த டைட்டானிக் கப்பலை ஒலிம்பிக் என பெயர் மாற்றி காப்பீட்டை தொகையை பெருவதற்காக நிறுத்திவிட்டு, ஒலிம்பிக் கப்பலை டைட்டானிக்கு பதிலாக அனுப்பி விட்டனர்.

இரண்டு கப்பல்களுக்கு இடையேயான வேறுபாடு என்னவென்று மக்கள் கூறவேண்டுமென்றால் அது ‘சி’ டெக் (‘C’ Deck) மட்டுமே. அதாவது டைட்டானிக் உருவாக்கப்படும் போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரே அளவு கொண்ட 14 சன்னல்கள் வரிசையாக இருந்துள்ளது. ஆனால் 1912 ஏப்ரல் 10ம் தேதி மிகவும் குறுகிய வெவ்வேறு அளவு கொண்ட 16 சன்னல்கள் இருந்துள்ளது.

இந்த சன்னல்கள் மட்டும் ஆதாரமல்ல. கப்பல் கட்டும் பணியில் இருந்த ஹாலந்து மற்றும் வால்ஃப் ஆகியோர் இந்த மிகப்பெரிய மோசடியை அறிந்தவர்கள். இருப்பினும் அவர்களால் இதனை பற்றி வெளியே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இதனை பற்றி அவர்கள் வாயை திறந்தால் வெள்ளை மாளிகையின் அவர்கள் பார்க்கும் கடைசி வேலை இதுவே என மிரட்டப்பட்டிருந்தனர். எனவே தவறு நடந்துள்ளது என தெரிந்தும் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் எதுவும் வெளியே சொல்ல முடியாமல் போனார்கள்.

இந்த கப்பல்கள் மாற்றப்பட்டதை ‘படி ஃபென்டோன்’ என்பவர் தனது சக நண்பருக்கு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நபர் நார்த் ஸ்டார் செய்தித்தாளுக்கு ஜூலை 31, 1996 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அவரது மகன் படி ஃபென்டோனுடன் நடந்த உரையாடலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், “பரிசோதனைக்கு வந்த குழுவினர் கப்பலுக்கு மறுபுறம் அழைத்து செல்லப்பட்டனர். நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவரும், அரசாங்கத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மற்றோரு நபரும் “அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம்” என்ற ஒன்றை பற்றி சுட்டிக்காட்டி, காப்பீட்டு ஊழல் பற்றிய வதந்திகள் மற்றும் கப்பல் மூழ்கிய காரணத்தையும் பற்றி அவர்கள் வெளியே சொன்னால், சொன்ன நபருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டணையும், வெளியே வந்த பிறகு அவர்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்காது எனவும் மிரட்டப்பட்டனர்”

ஜே.பீ. மோர்கன் தனது உடல்நலக்குறைவு காரணமாக கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார். உண்மையில் அவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சில் காணப்பட்டார், மேலும் அவர் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பது போல் தோற்றமளித்துள்ளார். ஜே. புரூஸ் இஸ்மேயின் மனைவியாகிய ஜூலியாவும், அவர்களது குழந்தைகளும் ஜூலியாவின் உடல்நலக் குறைபாடு காரணமாக அன்றைய டைட்டானிக் பயணத்தை ரத்து செய்துள்ளனர், இருப்பினும் வேல்ஸில் உள்ள ஓட்டலில் அவர்கள் தென்பட்டுள்ளனர்

கப்பல் சவுத்தாம்ப்டன் விட்டு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஜே.பீ. மோர்கன் ஏழு மதிப்புமிக்க வெண்கல சிலைகளை கப்பலை விட்டு எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஜே.பீ. மார்கன் பொதுமக்களுக்களிடையே வெளிப்படையாக பேசிய பின்னர் பலர் அவரின் பேச்சை நம்பி விட்டனர் மற்றும் அந்தப் பயணத்தில் தான் வெளிநாடு சென்றிருக்க கூடும் ஆனால் உடல்நிலை காரணமாக பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் உலகினை நம்ப வைத்தார். ஆனால், கப்பல் மூழ்குவது தெரிந்த ஜே.பீ. மார்கன் இந்த பொய்யினை சொல்வதற்கான உண்மையான காரணம் என்ன?.

எஸ்.எஸ். கலிஃபிரியன் என்ற கப்பல் நிலக்கரி வேலை நிறுத்தம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது நிலக்கரியைக் உபயோகித்து, பயணிகள் யாருமின்றி லண்டனை விட்டு வெளியேறியபோது அனைவருமே குழம்பினர் எப்படி இவர்களுக்கு நிலக்கரி கிடைத்தது மற்றும் பயணிகள் இல்லாமல் கிழம்பியது என்று. அதற்கு பதிலாக ஒரு சிறிய வகை போர்வைகள் மற்றும் சூடான ஆடைகள் டைட்டானிக் கப்பலில் இருந்ததாகவும், ஒருவேளை இந்த சில காரணங்களால், கேப்டன் லாட் (Lord) சீக்கிரமாகவே துறைமுகத்திலிருந்து டைட்டானிக்குடன் வெளியெறினாரோ?, அட்லாண்டிக்கை கடந்து போக பல பயணிகள் இருந்தும் பாஸ்டனுக்கு பயணிக்கும் எவருக்கும் டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை. கப்பலில் இழப்பீடு கோர வேண்டுமென்ற திட்டத்தில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகின்றது.

கேப்டன் லாட் (Lord)  வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு அவசரத்தில் இருந்ததாகவும், அவர் வயர்லெஸ் தரவரிசையை விட்டுவிட்டு வெளியேறிவிட்டார் என்பதும் கிடைத்தத் தகவல். நிச்சயமாக, எஸ்.எஸ். கலிஃபிஷியன் டைட்டானிக் கப்பலுக்கு 140 மைல் தூரத்தில் இருந்த ஒரே கப்பலாகும்.

மற்றொரு விசயம் என்னவென்றால் டைட்டானிக் மற்றும் White Star Line விளம்பரங்களைப் பார்க்கும்போது, ஒலிம்பிக் மற்றும் அதன் உட்புற படங்களை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரியவரும்.

டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்திற்காக மக்கள் செலுத்திய பணம் டைட்டானிக்கின் பயணத்திற்காக அல்ல அது ஒலிம்பிக்கின் பயணத்திற்காக என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளும்போது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இந்த கப்பல் மாற்றத்தால் பெரும்பயன் அடைந்தது யாரென்று தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.