நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!

வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை என்பது அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளையும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளிவர தொடங்கியுள்ளது

முதல் கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் உள்ள மேலும் சில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் அதேபோல் சென்னை உள்ளிட்ட வட மாவட்ட ஆட்சித் தலைவர்களும் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment