கனமழை எதிரொலியால் நாளை பள்ளிகள் விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை முதல் சனிக்கிழமை வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment