Connect with us

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி…

thiruvannamalai deepam 160659086

தமிழகம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி…

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி.., நவம்பர் 27ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது..

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக வருகின்ற 30 (30.09.2022)ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைந்துள்ள சம்பந்த கணேசர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top