நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை?

கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பதும் நவம்பர் மாதம் முழுவதுமே கிட்டத்தட்ட விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றும் 20 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

தற்போது வரை நான்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக நாளை நவம்பர் 30-ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது

அதேபோல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment