திருவள்ளூரில் பரபரப்பு! பேருந்து-லாரி மோதி விபத்து… 3 பேர் பலி!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் பகுதியில் தனியார் சொகுசுப் பேருந்தும் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 27 பணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது.

கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு: ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் சென்ற மாணவர்கள்!!

இதில் நிலைத்தடுமாறி பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நடத்துனர் ஸ்ரீதர், பயணிகள் தொக்கல்லா சதீஷ்குமார், தும்மலா ரோஷித் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சென்னை அரசு மருத்துவ மனைக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாஜக தலைமையில் அதிமுக! முன்னாள் அமைச்சர் காரசார பேட்டி..!!

மேலும், விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.