Connect with us

திருப்பூர் ரயில் நிலையத்தில் ‘குமரன் ரயில் நிலையம்’ என தற்காலிக பெயர் பலகை..!!

tirupur railway station

தமிழகம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் ‘குமரன் ரயில் நிலையம்’ என தற்காலிக பெயர் பலகை..!!

நம் நம் இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரத்தை பெற்றாலும் அதற்கு முன்பு பல விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களது உயிரை கொடுத்துள்ளனர். அவர்களிலும் தன் உயிர் போகும் சமயத்திலும் கூட தேசிய கொடியை கீழே விழாமல் தாங்கி பிடித்தவாறு உயிரிழந்தார் குமரன்.

இவர் திருப்பூர் மாவட்டத்தில் சேர்ந்தவர். இதனால் இவரை கொடிகாத்த குமரன் என்றும் திருப்பூர் குமரன் என்றும் அழைப்பர். இவரை இவரின் வீர தியாகத்தை போற்றும் வகையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சில முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் குமரன் ரயில் நிலையம் என தற்காலிகமாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்திற்கு நெசவுத்தொழில், பனியன் தொழிற்சாலைகள் என பல தொழில் நகரமாக இருந்தாலும் விடுதலைப் போராட்டத்தில் இவர் போன்றோர் அங்கு இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top